Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: புலி, கரடி உடற்பாகங்களை வைத்திருந்த வியட்நாமியர்கள் கைது

மலேசியாவில் வன விலங்குகளின் உடற் பாகங்களை வைத்திருந்ததாக வியட்நாமியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியா: புலி, கரடி உடற்பாகங்களை வைத்திருந்த வியட்நாமியர்கள் கைது

படம்: AFP

மலேசியாவில் வன விலங்குகளின் உடற் பாகங்களை வைத்திருந்ததாக வியட்நாமியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நீர், நிலம், இயற்கை வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து, புலி, கரடி ஆகிய விலங்குகளின் உடற் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.

மலேசியாவின் காடுகளில் யானை, புலி, ஒராங் உட்டான் ஆகிய விலங்குகள் வேட்டையாடப்படுவதுண்டு.

மலேசியாவில் விலங்குகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன அவற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அதிக நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அமைச்சர் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரும், அடுத்த மூன்று நாள்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்படுவர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்