Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Pokemon Go - இப்படியும் விளையாடலாமா?

தைவானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் Pokemon Go விளையாட்டில் தோன்றும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் பிடிக்க புதிய முறையைக் கையாண்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

தைவானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் Pokemon Go விளையாட்டில் தோன்றும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் பிடிக்க புதிய முறையைக் கையாண்டுள்ளார்.

70 வயது சென் சான்-யுவான், தனது மிதிவண்டியில் 9 கைத்தொலைபேசிகளைக் கட்டி வைத்து ஒரே நேரத்தில் எத்தனைக் கதாபாத்திரங்களைப் பிடிக்க முடியுமோ, அத்தனைக் கதாபாத்திரங்களையும் பிடிப்பாராம்.

அவர் அவ்வாறு விளையாடும்போது எடுக்கப்பட்ட படம் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விளையாட்டின் 30ஆம் கட்டத்தைத் தாண்டிய கைத்தொலைபேசிகளைத்தான் தனது மிதிவண்டியில் பொருத்துவதாக அவர் தைவானியச் செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார்.

தனது பொழுதுபோக்கால் தனக்கு மாதந்தோறும் சுமார் 330 டாலர் செலவாகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாரத்திற்கு 6 முறையாவது திரு. சென்னை அவர் வழக்கமாக விளையாடும் பூங்காவில் காணலாம் என மற்ற Pokemon Go விளையாட்டாளர்கள் கூறினர்.







 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்