Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பொக்கிமோன் கோ' விளையாடி விளம்பரம் செய்யும் தாத்தா

சைக்கிளில் சுமார் 30 கைபேசிகளைப் பொருத்தி விளையாடிவரும் தாத்தா இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

வாசிப்புநேரம் -
'பொக்கிமோன் கோ' விளையாடி விளம்பரம் செய்யும் தாத்தா

(படம்: CNA)

தைவான்: சைக்கிளில் சுமார் 30 கைபேசிகளைப் பொருத்தி விளையாடிவரும் தாத்தா இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

இணையத்தில் அவர் பிரபலமாவதை நல்ல வாய்ப்பாகக் கருதி புதிய Asus ZenFone ரகக் கைபேசி நிறுவனம் அவருடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தத்தில் தாத்தாவுக்கு மேலும் 22 புதிய Asus ZenFone Max Pros கைபேசிகளை நிறுவனம் வழங்கியது.

70 வயது மதிக்கத்தக்க தாத்தா முதலில் 'பொக்கிமோன் கோ' விளையாட 6 கைபேசிகளை மட்டுமே பயன்படுத்தினார்.

விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க கைபேசிகளும் அதிகரித்தன.

மிகை மெய்நிகர்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் 'பொக்கிமோன் கோ' விளையாட்டை உலகளவில் சுமார் 5 மில்லியன் பேர் விளையாடி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்