Images
  • pollutant2
    (படம்:REUTERS/Anushree Fadnavis)

புதுடில்லியில் தீபாவளிப் பட்டாசுகளால் மோசமான காற்றுத் தூய்மைக் கேடு

இந்தியத் தலைநகர் புதுடில்லியில், காற்றுத் தூய்மைக் கேடு தீவிரமடைந்திருக்கிறது.

தீபாவளியை ஒட்டிப் பலரும் பட்டாசுகளை வெடித்தது அதற்குக் காரணம்.

மத்திய அரசாங்கத்தின் தரநிலைக் குறியீடுகள், புதுடெல்லியின் காற்றுத் தரம் "மிக மோசம்" என்றும், "கடுமையாக இருக்கிறது" என்றும் காட்டுகின்றன.


அந்நிலை நீடித்தால், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணிக்கு காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 526ஆக இருந்ததாய், புதுடெல்லியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகம் Twitterஇல் பதிவிட்டிருந்தது.


குறியீடு 50 அல்லது அதற்கும் கீழாக இருப்பதே ஆரோக்கியத்துக்கு உகந்தது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.



 

Top