Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கங்கை நதி எப்போது சுத்தமாகும்?

கங்கை நதி, இந்தியாவின் புனித நதியாகப் போற்றப்படுகிறது.

வாசிப்புநேரம் -
கங்கை நதி எப்போது சுத்தமாகும்?

படம்: REUTERS/Danish Siddiqui

கங்கை நதி, இந்தியாவின் புனித நதியாகப் போற்றப்படுகிறது.

தொழிலியல் மையங்கள், மக்கள்தொகை அதிகம் உள்ள நகரங்கள் ஆகிவற்றின் வழியே செல்லும் கங்கை, வங்காள விரிகுடாவில் இணைகிறது.

ஆனால் அதிகரிக்கும் தூய்மைக்கேட்டால் அதன் நீர் நச்சுத்தன்மை கொண்டதாக மாறும் அபாயத்தில் உள்ளது.

பல ஆண்டுகளாகக் கழிவுநீர், மனிதக் கழிவுகள், தொழிற்சாலை ரசாயனங்கள் போன்றவை நதியின் தூய்மையை அதிகம் பாதித்து வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2020ஆம் ஆண்டிற்குள் கங்கை நதியைத் தூய்மையாக்க 3 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஆனால் இதுவரை அந்த நிதியில் 10 விழுக்காடு மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக REUTERS செய்தி நிறுவனம் கூறியது.

இந்திய நீர்வள அமைச்சர் நித்தின் கட்காரி (Nitin Gadkari) கங்கை நதி அடுத்த மூன்று மாதங்களில் 70 முதல் 80 விழுக்காடு சுத்தம் செய்யப்படும் என்றும், 2020 மார்ச் மாதத்திற்குள் முழுமையாகச் சுத்தம் செய்யப்படும் என்றும் கடந்த மாதம் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்