Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியப் பயணத்தில் திடீர்த் திருப்பம் - வியட்நாம் பிரதமரைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike Pompeo), வியட்நாம் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஆசியப் பயணத்தில் திடீர்த் திருப்பம் - வியட்நாம் பிரதமரைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

(படம்: AP/Eranga Jayawardena)

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ (Mike Pompeo), வியட்நாம் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அந்தச் சந்திப்பு கடைசி நிமிடத்தில் திட்டமிடப்பட்டது.

திரு. பொம்பேயோ ஆசியப் பயணத்தின் இறுதிக்கட்டமாக அது அமைந்தது.

வட்டாரத்தில், சீனக் கொள்கைகள் குறித்து வியட்நாமியப் பிரதமருடன் திரு. பொம்பேயோ பேசினார்.

தென் சீனக் கடல் பகுதியில் பெய்ச்சிங் உரிமை கோருவது, மேகோங் (Mekong) ஆற்றையொட்டி அது மேற்கொள்ளும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியன பற்றியும் கலந்துபேசப்பட்டது.

திரு. பொம்பேயோவின் ஆசியப் பயணத் திட்டத்தில் முதலில் ஹனோய் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்குப் பிறகு அவர் வியட்நாம் சென்றுள்ளார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், திரு பொம்பேயோவின் பயணம் அமைந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்