Images
  • anow
    படம்: AFP

மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானில் 110 பேர் மரணம்

பனிச்சரிவு, வெள்ளம், கடுங்குளிர் என மோசமான வானிலை காரணமாகக் கடந்த சில நாள்களில் மட்டும் பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் 110 பேர் மாண்டு விட்டனர்.

கடுமையான பனிச்சரிவு காரணமாக பொதுமக்கள் தனியாக சிக்கிக் கொள்வதாகவும் அதனால் அவர்களை மீட்பது கடினமாய் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் குறைந்தது 75 பேர் மாண்டதாகவும், 64 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதி பனியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 55 பேர் மாண்டதோடு 10 பேரைக் காணவில்லை.

ஆஃப்கானிஸ்தானில் 39 பேர் மாண்டனர்.

வரும் நாள்களில் வானிலை மேலும் மோசமடையலாமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானுக்கு அனைத்துலக சமூகம் பில்லியன் கணக்கான டாலர் உதவியளித்துவந்தபோதும், அங்கே கடுமையான வறுமை நிலவுகிறது.

மலைப்பாங்கான அந்த நாட்டில், கடுங்குளிரால் ஆண்டுதோறும் சிலர் மடிந்துபோகின்றனர்.


 

Top