Images
  • PD
    ( படம்: Sumisha Naidu )

போர்ட் டிக்சன் இடைத்தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 54 விழுக்காட்டு வாக்குகள் பதிவு

மலேசியாவின் போர்ட் டிக்சன் (Port Dickson) தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி 54 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவுசெய்ததாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இன்றைய இடைத்தேர்தல் முடிவுகள், திரு. அன்வார் இப்ராஹிமின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.

திரு. அன்வாரை எதிர்த்து 6 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் ஆணையம், இரவு 10 மணிக்குள் முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக New Straits Times நாளேட்டின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. 

Top