Images
  • Port Dickson
    (படம்:  Justin Ong/ CNA)

போர்ட் டிக்சனில் இன்று இடைத்தேர்தல்

மலேசியாவின் போர்ட் டிக்சன் (Port Dickson) தொகுதியில், திரு. அன்வார் இப்ராஹிமின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில், இன்று நடைபெறும் இடைத்தேர்தலில், 7 முனைப் போட்டி நிலவுகிறது.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளராகத் திரு. அன்வார் இப்ராஹிம் களமிறங்குகிறார்.

பதவியிலிருந்தபோது தாம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று திரு. அன்வார் தமது பிரசாரத்தின்போது குறிப்பிட்டுக் கூறினார்.

இன்றைய இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால், தற்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதிடமிருந்து, திரு. அன்வார் நாளடைவில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வகைசெய்யும்.

இடைத்தேர்தலில் திரு. அன்வாருக்கான வெற்றிவாய்ப்பு அதிகம் இருந்தபோதும், அவர் வெற்றியைச் சுலபமாகக் கருதவில்லை.

திரு. அன்வாரின் இறுதி நாள் பிரசாரத்தில், மலேசிய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மகாதீர் முகமதின் மகனும், கெடா மாநில முதல்வருமான திரு. முக்ரீஸும் கலந்துகொண்டார்.
தமது தந்தை ஈராண்டுக்குள் பொறுப்புகளைக் கைமாற்றத் திட்டமிட்டிருப்பதாய் அவர் கூறினார்.

போர்ட் டிக்சன் தொகுதியில் வாக்களிக்க 70,000க்கும் அதிகமானோர் தகுதிபெற்றுள்ளனர்.

இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்கும்.

Top