Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாசிர் கூடாங் நெடுஞ்சாலை வழியில் ரசாயனக் கழிவை அப்புறப்படுத்தும் மற்றோர் இடம்?

பாசிர் கூடாங்கில் ரசாயனக் கழிவுகளை அப்புறப்படுத்தும்  மற்றோர் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாய்க் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
பாசிர் கூடாங் நெடுஞ்சாலை வழியில் ரசாயனக் கழிவை அப்புறப்படுத்தும் மற்றோர் இடம்?

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் படம்.

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாசிர் கூடாங்கில் ரசாயனக் கழிவுகளை அப்புறப்படுத்தும்  மற்றோர் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாய்க் கூறப்படுகிறது.

அது ஜொகூர் பாரு-பாசிர் கூடாங் விரைவுச்சாலை வழியில் உள்ளது.

அந்த இடத்தில் கனரக இயந்திரங்கள் மூலம் ரசாயனக் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாக Bernama செய்தி  நிறுவனம் தெரிவித்தது.

10 பீப்பாய் ரசாயனக் கழிவுகள் அந்த இடத்திற்கு அருகே உள்ள விரைவுச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

ரசாயனக் கழிவுகள் அகற்றப்படும் நிழற்படங்கள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட கிம் கிம் ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்