Images
  • pothole
    ( படம்: AFP )

மகனின் நினைவாகக் குண்டு குழிகளை மூடும் தந்தை

இந்தியாவின் மும்பை நகரில் வசிக்கும் தாதாராவ் பில்ஹோர் அன்றாடம் செய்யும் பணி இது.

சாலையில் தென்படும் குண்டும் குழியுமான இடங்களை மூடுகிறார். பின் மண்வெட்டியைத் தரையில் போட்டுவிட்டு, வானத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்கிறார்.

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் ஏற்பட்ட விபத்தில் மகனைப் பலி கொடுத்தவர் தாதாராவ்.

2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது 16 வயது மகன் சாலை விபத்தில் மாண்டான்.

மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, குண்டும் குழியுமாக இருந்த சாலையில் தடுமாறி மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த அவரது மகன் தூக்கியெறியப்பட்டான்.

தலைக்கவசம் அணியாததால், அவன் சம்பவ இடத்திலேயே மாண்டான்.

வாழ்க்கையே வெறுமையானது தாதாராவுக்கு.

அதிலிருந்து சாலை சீர் செய்யும் பணியில் இறங்கினார் அவர்.

குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் சென்று தம் மகனைப்போல் மேலும் பலர் மாண்டுபோகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படிச் செய்யத் தொடங்கியதாகச் சொல்கிறார் தாதாராவ்.

மும்பையில் வருடாந்தரப் பருவமழைக்குப் பிறகு, சாலைகள் பழுதடைவது வழக்கம்.

இதனால் சாலைகளில் ஏகப்பட்ட குழிகள். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில், ஆக அதிகமான குழிகளைக் கொண்ட நகரம் என்ற பெயரை மும்பைப் பெறக்கூடும் என்று கூடச் சொல்லப்படுகிறது.  

Top