Images
  • chi pray 1
    (படம்: AFP/Fred Dufour)

செல்வத்தை வழங்கும் கடவுளை வணங்கும் சீனர்கள்

செல்வத்தை வழங்கும் கடவுளை வழிபட ஆயிரக்கணக்கான சீனர்கள் குய்யுவான் ஆலயத்தில் திரண்டுள்ளனர். மத்திய சீனாவில் அந்த ஆலயம் அமைந்துள்ளது.


சீனப் புத்தாண்டின் 5ஆம் நாள் காய்ஷென்(Caishen) கடவுளின் பிறந்தநாளைக் குறிக்கிறது. அவரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.


கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பலர் அந்தப் பௌத்த ஆலயத்தில் கூடினர். ஊதுவத்திகளை எரித்து தங்களின் வேண்டுதல்களைப் பக்தர்கள் முன்வைத்தனர்.  

Top