Images
  • KFBG
    படம்: KFBG

நிலச்சரிவால் பிளவுபட்ட வனத்தை இணைக்கும் சிறப்புக் கயிறுகள்...அரிய மனிதக் குரங்குகளுக்கு நம்பிக்கை

சீனாவின் ஹைனான் (Hainan) தீவில், நிலச்சரிவால் பிளவுண்ட வனத்தை இணைப்பதற்கு உருவாக்கப்பட்ட சிறப்புக் கயிறுகள், அங்கு வாழும் மனிதக் குரங்குகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.

வனத்தில் வாழும் Hainan gibbons எனும் உலகின் ஆக அரியவகை மனிதக் குரங்கு மரங்களில் மட்டுமே இருக்கும்.

Rammasun எனும் கடும் சூறாவளி 2014-ஆம் ஆண்டில் தீவைத் தாக்கியதில், வனம் பெரும் அளவில் சேதமடைந்தது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

வனத்தில் 15 மீட்டர் அகலம் கொண்ட பள்ளங்கள் உருவானதில், குரங்குகள் வனத்தைக் கடந்து செல்ல சிரமப்பட்டன.

தீனியையும் துணையையும் தேட முடியவில்லை.

அதற்குத் தீர்வுகாண முனைந்த இயற்கை ஆர்வலர்கள், பிரிந்திருந்த வனப்பகுதிகளை 18 மீட்டர் நீளமான கயிறுகளின் மூலம் இணைத்தனர்.

மனிதக் குரங்குகளும் அவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகின்றன.

அருகிவரும் Hainan gibbons வகையை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.  

Top