Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து அரசரின் சகோதரி பிரதமர் பதவிக்காகப் போட்டி

தாய்லந்து அரசரின் அக்காள் உபோல்ரத்னா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

வாசிப்புநேரம் -
தாய்லந்து அரசரின் சகோதரி பிரதமர் பதவிக்காகப் போட்டி

படம்: AFP/Fred Dufour

தாய்லந்து அரசரின் அக்காள் உபோல்ரத்னா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

'Thai Raksa Chart' கட்சி அந்த அறிவிப்பை வெளியிட்டது.

தாய்லந்து அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத நிகழ்வாக அந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

67 வயது இளவரசி அரசியலில் நுழைவார் என்ற வதந்தி உண்மையாகியுள்ளது.

'Thai Raksa Chart' கட்சியைத் தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷிணவாட் பின்னாலிருந்து இயக்குவதாகக் கூறப்படுகிறது.

தாய்லந்துப் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்