Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிக்க முன்னுரிமை தரப்படும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவை இணைத்துக்கொண்ட சீனா

COVID-19 தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டால், அதனை விநியோகிக்க முன்னுரிமை தரப்படும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவை இணைத்துக்கொள்ளச் சீனா இணங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பு மருந்தை விநியோகிக்க முன்னுரிமை தரப்படும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவை இணைத்துக்கொண்ட சீனா

(படம்: Handout / H2O Image / AFP)

COVID-19 தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டால், அதனை விநியோகிக்க முன்னுரிமை தரப்படும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவை இணைத்துக்கொள்ளச் சீனா இணங்கியுள்ளது.

மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன்(Hishammuddin Hussein) அதனைத் தெரிவித்தார்.

கோலாலம்பூர் சென்றுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஈயுடன் பங்கேற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

சீனா, அதன் தொடர்பில் உறுதியளித்ததைக் கோலாலம்பூர் வரவேற்பதாக அவர் குறிபிப்ட்டார்.

தடுப்பு மருந்து தொடர்பான ஆய்வு, மேம்பாடு, விநியோகம் ஆகியவற்றில் மலேசிய ஆய்வு நிறுவனங்களும், சீன நிறுவனங்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்படவும் பெய்ச்சிங் ஒப்புக்கொண்டதாக மலேசிய அமைச்சர் தெரிவித்தார்.

சீனா அடுத்த மாதத்திற்குள் பொதுமக்களுக்குத் தடுப்பு மருந்தை விநியோகிக்க நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்