Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 'பாலியல் பலாத்காரம் நிறுத்தப்படவேண்டும்' - பெண்கள் பேரணி

'பாலியல் பலாத்காரம் நிறுத்தப்படவேண்டும்' என்று நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் பேரணி நடத்திய போது காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: 'பாலியல் பலாத்காரம் நிறுத்தப்படவேண்டும்' - பெண்கள் பேரணி

(படம்: Reuters)

புதுடில்லி: 'பாலியல் பலாத்காரம் நிறுத்தப்படவேண்டும்' என்று நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் பேரணி நடத்திய போது காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்திலிருந்து இந்தியா கேட் வரை பேரணி நடத்தி வந்தனர்.

காவல்துறையினர் அமைத்த தடுப்புகளில் ஏற முயன்ற பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாக NDTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அண்மையில் நேர்ந்தது போன்ற பலாத்காரச் சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரி வருகின்றனர் பெண்கள்.

இதனையொட்டி, டில்லி பெண்கள் ஆணையம் எனும் பெண்ணியச் சங்கம், கடந்த வாரத்திலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக NDTV தெரிவித்தது.

பாலியல் பலாத்காரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் 6 மாதங்களுக்குள் தூக்கிலிடப்படவேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்