Images
  • protests
    (படம்: Amir Yusof/ Twitter)

பேரணியில் கலந்துகொள்ள மலேசியாவின் பல பகுதிகளிலிருந்து திரண்டுள்ள மக்கள்

கோலாலம்பூர்: மலேசியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொள்வதற்காக, மெர்டேக்கா சதுக்கத்தின் அருகில் உள்ள பள்ளிவாசலில் திரண்டுள்ளனர்.

ICERD எனும் இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணிக்கு, மலேசிய எதிர்க் கட்சிகளான அம்னோவும், பாஸும் ஆதரவு தந்துள்ளன.

பள்ளிவாசலில் தொடங்கி மாமன்னரின் அரண்மனை வரை அணிவகுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


பாஸ் கட்சி ஆதரவாளர்கள் சிலர் Masjid Jamek ரயில் நிலையத்தில் கூடியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பேரணியில் கலந்துகொள்வோருக்கு மலேசியக் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.

உரிய இடங்களில் நிறுத்தப்படாத வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்கானு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் பலர் கோலாலம்பூர் சென்றடைந்துள்ளனர்.


பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையைக் காவல்துறை வெளியிடவில்லை. இருப்பினும், பேரணி சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தேவையான அதிகாரிகள் பணியில் இருப்பர் என்று அது உறுதியளித்தது. 

பேரணி இன்னும் பிற்பகல் 2 மணி தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Top