Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: PUBG விளையாட்டுக்கு அடிமையாகித் தந்தையைக் கொன்ற மகன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் PUBG விளையாட்டுக்கு அடிமையாகித் தந்தையைக் கொன்றுள்ளார் 21 வயது ஆடவர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: PUBG விளையாட்டுக்கு அடிமையாகித் தந்தையைக் கொன்ற மகன்

(படம்: Quora/Mohit Hotwani)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் PUBG விளையாட்டுக்கு அடிமையாகித் தந்தையைக் கொன்றுள்ளார் 21 வயது ஆடவர்.

ரகுவீர் என்னும் அந்த ஆடவர் கைத்தொலைபேசியில் விளையாடும் PUBG விளையாட்டுக்குப் பல மாதங்களாக அடிமை.

இணையவசதி இருந்தால்தான் அந்த விளையாட்டை விளையாடமுடியும் என்பதால் ரகுவீர் அவரின் தந்தையிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் கேட்டுள்ளார்.

தந்தை பணம் கொடுக்க மறுத்ததும், கோபத்தில் ரகுவீர் சரமாரியாகத் தன் தந்தையைத் தாக்கிக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நேற்று அதிகாலை காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆடவர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டதாகவும், குற்றத்தை ரகுவீர் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவர் மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்