Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் - கொரியப் பேச்சு வார்த்தைக்குப் புத்துயிர்

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இரு கொரியாக்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைக்குப் புத்துயிர் அளித்துள்ளன.

வாசிப்புநேரம் -
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் - கொரியப் பேச்சு வார்த்தைக்குப் புத்துயிர்

படம்: Reuters

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், இரு கொரியாக்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைக்குப் புத்துயிர் அளித்துள்ளன.

அதனை அடுத்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சந்திப்பைப் போன்று, மேலும் ஒரு சந்திப்பு இரு கொரியாக்களுக்கும் இடையில் நடைபெறும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சு கூறியுள்ளது.

மேலும், எதிர்வரும் அந்த சந்திப்புகளின் மூலம், வட கொரியாவின் அணுவாயுதப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்  என்று அது தெரிவித்தது.

அதன் பொருட்டு, தென் கொரியா அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் பேச்சு நடத்த துணைபுரிய ஆயத்தமாய் இருப்பதாக, அமைச்சின் பேச்சாளர் கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்