Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: தந்தம் வெட்டப்பட்டு மாண்டுகிடந்த மேலும் ஒரு யானை

மலேசியாவின் சபா மாநிலத்தில், 'Pygmy' எனப்படும் அளவில் சிறிய யானை ஒன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சபா மாநிலத்தில், 'Pygmy' எனப்படும் அளவில் சிறிய யானை ஒன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டது.

பெலுரான் மாவட்டத்தில் அந்த ஆண் யானை மாண்டுகிடந்தது.

யானையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் காணப்பட்டன.

ஒரு மாதத்திற்குள் 'பிஜ்மி' யானை சுடப்பட்டு மாண்ட சம்பவம் இடம்பெற்றிருப்பது இது இரண்டாவது முறை.

மாண்ட யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.

குற்றவாளிகளைத் தேடிவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சென்ற மாத இறுதியில், டாவாவ் (Tawau) மாவட்டத்திலும் ஒரு 'பிஜ்மி' யானை அதேபோல தந்தம் வெட்டப்பட்ட நிலையில் மாண்டுகிடந்தது.

அதன் உடலில் 70 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

போர்னியோ மழைக்காடுகளில் காணப்படும் பிஜ்மி ரக யானைகள் அருகிவரும் விலங்கினப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்