Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: 11 மில்லியன் பேருக்குப் பரிசோதனை - யாருக்கும் கிருமித்தொற்று இல்லை

சீனாவின் சிங்டாவ் (Qingdao) நகரின் 11 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட COVID-19 பரிசோதனையில், யாருக்கும் கிருமித்தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனாவின் சிங்டாவ் (Qingdao) நகரின் 11 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட COVID-19 பரிசோதனையில், யாருக்கும் கிருமித்தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதக் காலத்தில், அங்கு 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த நகரில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, 10.9 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அங்கு சமூக அளவில் கிருமிப்பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் முற்றிலும் இல்லை என அந்த நகரின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்