Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாயின் கதறலைக் கேட்டு மகனை மீட்டுத்தந்த இந்திய ரயில்வே ஊழியருக்கு 50,000 ரூபாய் பரிசு

இந்தியாவில், ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவனைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு, 50,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாயின் கதறலைக் கேட்டு மகனை மீட்டுத்தந்த இந்திய ரயில்வே ஊழியருக்கு 50,000 ரூபாய் பரிசு

(படம்: Ministry of Railways)

இந்தியாவில், ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவனைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு, 50,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, பார்வை பாதிக்கப்பட்ட தாயாரோடு இருந்தபோது அந்தச் சிறுவன் தண்டவாளத்தில் விழுந்தான்.

ரயில் ஒன்று, அவனை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது.

சிறுவனின் தாயாரின் கதறல், ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்க்கெயின் (Mayur Shelke) காதுகளை எட்டியது.

சிறிதும் யோசிக்காமல் ஓடிச்சென்று சிறுவனைத் தூக்கி நடைமேடையில் ஏற்றிவிட்ட அவர், தாமும் உயிர்தப்பினார். அவரது அந்த தீரச் செயல், கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அந்தக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தன்னலமற்ற 30 வயது ஷெல்க்கேயின் செயலைப் பார்த்த பலர், அவரை "சூப்பர் ஹீரோ" அதாவது சிறப்பு ஆற்றல் கொண்ட நாயகன் எனப் போற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஷெல்க்கே, ஆகச் சிறந்த துணிச்சலை வெளிப்படுத்தி இருப்பதாக, ரயில்வே அமைச்சு தனது Twitter-இல் பதிவுசெய்திருந்தது.

- AFP/vc 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்