Images
  • rape

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாது மாரடைப்பால் மரணம்

மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் 47 வயது மாது ஒருவர் கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து மாரடைப்பால் மாண்டார்.

அவர் புக்கிட் பாயோங் மருந்தகத்தில் நேற்று அதிகாலை நான்கு மணிவாக்கில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னிரவு பன்னிரண்டேகால் மணியளவில் மாதின் வீட்டிற்குள் அவரது கணவர் இல்லாத நேரத்தில் முகமூடி அணிந்த ஆடவர் ஒருவர் கத்தியுடன் அத்துமீறி நுழைந்ததாகத் தலைமைக் காவல்துறை அதிகாரி முகமது சுஹைமி அலி கூறினார்.

ஆடவர் மாதைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் மாது அவரின் முகமூடியைக் கழற்ற முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் அடையாளம் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் ஆடவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

சம்பவத்தைப் பற்றிக் குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார் அந்த மாது.

சில மணிநேரத்திற்குப்பின் அவர் மிகவும்பலவீனமான நிலையில் இருந்ததை அறிந்த அவரது கணவர் உடனே மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார்.

மாதின் உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆடவரைத் தேடிப்பிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
 

Top