Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகின் ஆக அரிய ரத்த வகை கொண்ட மலேசியப் பெண்

உலகின் ஆக அரிய ரத்த வகை கொண்ட மலேசியப் பெண்

வாசிப்புநேரம் -
உலகின் ஆக அரிய ரத்த வகை கொண்ட மலேசியப் பெண்

படம்: Terengganu blood bank

Rhnull என்ற ஆக அரிய வகை ரத்தம், உலகில் 43 பேருக்கு மட்டுமே உள்ளது.

தங்க ரத்தம் என்று அழைக்கப்படும் அது, மலேசியாவின் திரங்கானு (Terengganu) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் உள்ளது.

திரங்கானு ரத்த வங்கி Facebook பக்கத்தில் அதனைத் தெரிவித்தது.

மலேசியாவில் அந்த ரத்த வகையைக் கொண்டிருப்பது அவர் மட்டுமே என்று கூறப்பட்டது.

அந்தப் பெண் தானம் செய்த ரத்தம் கோலாலம்பூரில் உள்ள தேசிய ரத்த வங்கிக்கு அனுப்பப்படும்.

அங்கு அது 10 ஆண்டுக்கு வைத்திருக்கப்படும் என்று திரங்கானு ரத்த வங்கி தெரிவித்தது.

யாரேனும் நோயாளிக்கு அந்த ரத்த வகை தேவைப்பட்டால், அது பயன்படுத்தப்படும்.

Rhnull ரத்தத்தின் சிவப்பணுக்களில் Rh புரதம் அறவே இருக்காது.

அந்த வகை ரத்தம் முதன்முதலில் 1961ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்