Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வாட்டிய எலி இறைச்சி சாப்பிட ஆசையா?

கம்போடியா: சோற்றுக்குக் கீரை வகை, கோழி, இறைச்சி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது பலருடைய வழக்கம்.

வாசிப்புநேரம் -
வாட்டிய எலி இறைச்சி சாப்பிட ஆசையா?

(படம்: Tang Chhin Sothy/AFP)

கம்போடியா: சோற்றுக்குக் கீரை வகை, கோழி, இறைச்சி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது பலருடைய வழக்கம்.

ஆனால் கம்போடியாவில் அவற்றுக்குப் பதிலாக வாட்டிய எலி இறைச்சி சோற்றுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது.

சீக்கிரமாகச் சமைத்துச் சாப்பிடக்கூடியது. குறைந்த விலைக்கு வாங்கக்கூடியது. இந்தக் காரணங்களால் பாத்தாம்பாங் (Battambang) வட்டாரத்தில் வாட்டிய எலி இறைச்சி பிரபலமாக உள்ளது.

சிறிய எலியைச் சுமார் 35 காசுக்கு வாங்கலாம். பெரிய எலியைச் சுமார் 1.70 வெள்ளிக்கு வாங்கலாம்.

1970களில் கெமரூஷ் (Khmer Rouge) ஆட்சிக்காலத்தின்போது, எலி, தவளை போன்ற சிறு விலங்குகளைப் பசியின் காரணமாக கம்போடிய மக்கள் உட்கொள்ள நேரிட்டது.

இப்பொழுது அவை ஊழியர்களுக்கு மலிவு உணவாகிவிட்டன.

விழாக் காலங்களில் கிட்டத்தட்ட 180 பெரிய எலிகள் விற்பனையாவதாகக் கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்.

எலிக் கறி எப்படி இருக்குமோ ? உள்ளே போய் என்னென்ன செய்யுமோ ? என்று கவலைப்படுவோருக்கு அந்த அச்சம் தேவையில்லை என்கிறார் கடைக்காரர்.

செழிப்பான நெல்வயல்களில் இருந்துதான் எலிகள் பிடித்துவரப்படுகின்றன என்பதால் அவை ருசியாகவே இருக்கும் என்று சான்றிதழ் கொடுக்கிறார் அவர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்