Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியாது'

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, தாம் பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை  ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியாது'

படம்: Bernama

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, தாம் பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

தம்முடன், தமது மகன் முக்ரிஸையும், மேலும் மூவரையும் கட்சியிலிருந்து வெளியேற்றியது சட்ட விரோதமான செயல் என்று அவர் கூறினார்.

முன்னதாகப் பிரதமர் முஹிதீன் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று டாக்டர் மகாதீர் கோரியிருந்தார்.

இம்மாதம் 18ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடியபோது அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

மலேசிய மாமன்னரின் உரை மட்டுமே அன்று இடம்பெற்றது.

அந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் உள்ளிட்ட ஐவரும் எதிர்த் தரப்பினரோடு அமர்ந்திருந்ததால் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவர்கள் கட்சியின் விதிமுறையை மீறியதாக பெர்சாத்து சொல்லிற்று.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்