Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானிய இராணுவம் கூடுதலாக அனைத்துலக அளவில் பங்களிக்கவேண்டும் - ஜப்பானியப் பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe), தமது நாட்டின் இராணுவம் அனைத்துலக அளவில் இன்னும் அதிகமாகப் பங்களிக்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜப்பானிய இராணுவம் கூடுதலாக அனைத்துலக அளவில் பங்களிக்கவேண்டும் - ஜப்பானியப் பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. படம்: REUTERS/Lucas Jackson

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe), தமது நாட்டின் இராணுவம் அனைத்துலக அளவில் இன்னும் அதிகமாகப் பங்களிக்கவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முற்போக்கு ஜனநாயகக் கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

நட்பு நாடுகள் வெளிநாட்டுத் தாக்குதலுக்கு இலக்காகும்போது ஜப்பானியத் துருப்புகள் பாதுகாப்பு வழங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

போரில் பங்கேற்பதைத் தடுக்கும் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை   மாற்றுக் கண்ணோட்டத்துடன் அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கிய சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், பிரதமர் அபே மாநாட்டில் அரசமைப்புச் சட்ட மாற்றம் பற்றியும் மற்ற அம்சங்கள் பற்றியும் பேசினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்