Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா மக்களை மியன்மாருக்குத் திருப்பி அனுப்ப முயற்சி

மியன்மாரிலிருந்து பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சா மக்களை மியன்மாருக்குத் திருப்பி அனுப்ப, இரு நாடுகளும் மீண்டும் விரைவில் முயற்சி மேற்கொள்ளவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்களை மியன்மாருக்குத் திருப்பி அனுப்ப முயற்சி

(படம்: AFP/Ed JONES)

மியன்மாரிலிருந்து பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சா மக்களை மியன்மாருக்குத் திருப்பி அனுப்ப, இரு நாடுகளும் மீண்டும் விரைவில் முயற்சி மேற்கொள்ளவிருக்கின்றன.

சுமார் 3,500 அகதிகள், மீண்டும் மியன்மாருக்குத் திரும்ப ஒப்புதல் பெற்றுள்ளனர்.

அவர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும்.

ஈராண்டுக்கு முன் ரக்கைன் மாநிலத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களைத் தொடர்ந்து, 730,000க்கும் அதிகமான ரொஹிஞ்சா மக்கள் பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றனர்.

அவர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பும் முயற்சிகள் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் பலர் மீண்டும் மியன்மாருக்குத் திரும்ப மறுத்துவிட்டதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்