Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்புக் கப்பல்களை அனுப்புகின்றன

53 பேருடன் காணாமல் போன KRI Nanggala 402 நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் மீட்புக் கப்பல்களை அனுப்புகின்றன என்று இந்தோனேசிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்புக் கப்பல்களை அனுப்புகின்றன

(படம்: Facebook/Ng Eng Hen)

53 பேருடன் காணாமல் போன KRI Nanggala 402 நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் மீட்புக் கப்பல்களை அனுப்புகின்றன என்று இந்தோனேசிய ராணுவம் தெரிவித்துள்ளது.

அவை இவ்வார இறுதியில் பாலியைச் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் MV Swift Rescue கப்பல், வெள்ளிக்கிழமை சென்று சேரக்கூடும் என்று இந்தோனேசிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அகமது ரியாட் (Achmad Riad) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மலேசியாவின் Mega Bakti கப்பல் ஞாயிற்றுக்கிழமை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KRI Nanggala 402 நேற்று வடக்கு பாலி கடல்பகுதியில், நீருக்கடியில் பாய்ச்சக்கூடிய ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனது.

அதிகாலை நாலரை மணிக்குக் கப்பலுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கப்பல் நீருக்குள் மூழ்கிய இடத்தின் மேற்பரப்பில் எண்ணெய்க் கசிவு தென்பட்டதாகவும், தேடலுக்கு உதவ 2 ஒலியலைத் திறன் கொண்ட கடற்படைக் கப்பல்கள் களமிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி, இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் மீட்புப் பணியில் உதவ முன்வந்ததாகத் திரு. ரியாட் இன்று தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்