Images
  • search effort
    படம்: Bernama

மலேசியாவில் காணாமற்போன சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தீவிரம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மலேசியாவில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் இருவரைத் தேடும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

926 கிலோமீட்டர் வரையிலான தேடல் பணிகள் தற்போது 1,667 கடல் சதுர கிலோமீட்டர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்டாவு-மெர்சிங் பகுதியில் காயாக் படகைப் பயன்படுத்திப் படகோட்டத்தில் ஈடுபட்ட இரு சிங்கப்பூரர்களும் காணாமல் போயினர்.

தேடல் பணிகள் நான்காம் நாளாகத் தொடர்கின்றன.

மலேசியக் கடல்துறைச் சட்ட அமலாக்க அமைப்பு 4 ஹெலிகாப்டர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

6 கப்பல்களில் 100க்கும் அதிகமான அதிகாரிகள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மெர்சிங் பகுதிக்கு அருகில் உள்ள தீவுகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகளும் மீனவர்களும் தேடல், மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர்.

52 வயதுத் திரு. டான் எங் சூனும் 64 வயதுத் திருவாட்டி புவா கியோக் டினும் கடந்த வியாழக்கிழமை காணாமல் போயினர்.

13 சிங்கப்பூரர்கள் அடங்கிய குழு ஒன்று என்டாவு தீவுகளுக்கு அருகில் காயாக் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்தச் சம்பவம் நேர்ந்தது.  


Top