Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நிருபர் மரியா ரேசாவுக்கு பிலிப்பீன்ஸ் அதிபர் பாராட்டு

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் (Rodrigo Duterte) அலுவலகம் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நிருபர் மரியா ரேசாவைப் (Maria Ressa) பாராட்டியுள்ளது.  

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் (Rodrigo Duterte) அலுவலகம் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நிருபர் மரியா ரேசாவைப் (Maria Ressa) பாராட்டியுள்ளது.

அந்த விருது, பிலிப்பீன்ஸ் பெண்மணிக்கான வெற்றி என்று அது வருணித்தது.

பிலிப்பீன்ஸில் Rappler எனும் இணையச் செய்தித் தளத்தைத் திருவாட்டி ரேசா தோற்றுவித்தார்.

அதன் வழி சட்ட ரீதியாக சவால் மிக்க பல வழக்குகளை நீதிமன்றத்தில் அவர் சந்தித்துள்ளார்.

அதிபர் டுட்டார்ட்டேயின் போதைப் பொருளுக்கு எதிரான போரில் பல சம்பவங்களைப் புலனாய்வு செய்து Rappler வெளியிட்டது.

சமூக ஊடகத்தின் வாயிலாக எதிரிகளை இலக்கு வைத்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் Rappler அம்பலப்படுத்தியது.

Rappler ஒரு பொய்த் தகவல் தளம் என்று அதிபர் டுட்டார்ட்டே முன்னர், வருணித்திருந்தார்.

Rappler அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின் ஒரு கருவி என்றும் அவர் கூறியிருந்தார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்