'வேலையிடங்களுக்கு மூக்குக் கண்ணாடி அணியும் உரிமை வேண்டும்': குமுறும் ஜப்பானிய பெண்கள்
வேலையிடங்களுக்கு மூக்குக் கண்ணாடி அணிந்துசெல்லும் உரிமை வேண்டும் என்று ஜப்பானியப் பெண்கள் Twitter இல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேலையிடங்களுக்கு மூக்குக் கண்ணாடி அணிந்துசெல்லும் உரிமை வேண்டும் என்று ஜப்பானியப் பெண்கள் Twitter இல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்மையில் முதலாளிகள் பெண்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பல விதிகளை வகுத்து வருகின்றனர்.
பெண் ஊழியர்கள் மூக்குக் கண்ணாடி அணிவதற்குத் தடைவிதிப்பது அவற்றில் ஒன்று.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பெண் ஊழியர்கள் High Heels எனப்படும் குதியுயர்ந்த காலணிகள் மட்டுமே அணியவேண்டும் என்ற நெறிமுறை விதிக்கப்பட்டது.
அதனையடுத்து 21,000க்கும் அதிகமானோர் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.