Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கின் சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு

ஹாங்காங்கின் சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கின் சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிப்பு

படம்: AFP/Anthony Wallace

ஹாங்காங்கின் சட்டமன்றக் கட்டடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கு உரிமை வழங்கும் மசோதா இரண்டாவது முறை இன்று வாசிக்கப்படவிருக்கிறது.

அதை முன்னிட்டு எழும் ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்க காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஹாங்காங்மீது சீனா விதிக்கவிருக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் வலுவான எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமன்ற வளாகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டடத்திற்குள் செல்லாதபடி முக்கிய சாலைகளின் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்த அவர்கள் முயல்கின்றனர்.

சீனாவின் தேசிய கீதம் தொடர்பான மசோதா அடுத்த மாதத்திற்குள் சட்டமாக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய சட்டம் நடப்புக்கு வந்தால், பள்ளிக்கூடங்களில் அது கற்பிக்கப்படுவதுடன் அமைப்புகளிலும் அது பாடப்படும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்