Images
  • Beijing cases increase
    (படம்: Reuters)

பெய்ச்சிங்கில் மேலும் 17 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று

சீனாவில் மேலும் 17 பேருக்குக் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோர் பெய்ச்சிங்கைச் சேர்ந்தவர்கள் என்று சீன தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று சீனாவில் 21 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. 

பெய்ச்சிங்கின் மக்கள்தொகை 20 மில்லியன். இம்மாதம் 11 ஆம் தேதி அங்கு இரண்டாவது அலையாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அங்கு 311 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து சீனத் தலைநிலம் திரும்பிய மூவருக்கு வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

சீனத் தலைநிலத்தில் உள்ள COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 83,500.



Top