Images
  • Japan Covid19
    (படம்: AP)

தோக்கியோவில் அதிகரிக்கும் கிருமிப் பரவல்

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் புதிதாக 57 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் சென்ற மாதப் பிற்பகுதியில் கிருமிப்பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, தோக்கியோவில் பதிவான ஆக அதிக தினசரி எண்ணிக்கை அது.

சென்ற வாரம் பதிவான 300-க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 120, இரவுநேரக் கேளிக்கை வட்டாரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், கிருமிப் பரவல் வெகுவாக அதிகரிக்காது என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜப்பானில் 18,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; அவர்களில் சுமார் தொள்ளாயிரத்து-70 பேர் மாண்டனர்.

Top