Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரே நாளில் 3.3 மில்லியன் ரிங்கிட் செலவிட்ட நஜிப் ரசாக்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் திரு. நஜிப் ரசாக், நகை வாங்க ஒரே நாளில் இரு கடன்பற்று அட்டைகள் மூலம் 3.3 மில்லியன் ரிங்கிட் (1.09 மில்லியன் வெள்ளி) செலவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஒரே நாளில் 3.3 மில்லியன் ரிங்கிட் செலவிட்ட நஜிப் ரசாக்

(படம்: AFP/Mohd Rasfan)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் திரு. நஜிப் ரசாக், நகை வாங்க ஒரே நாளில் இரு கடன்பற்று அட்டைகள் மூலம் 3.3 மில்லியன் ரிங்கிட் (1.09 மில்லியன் வெள்ளி) செலவிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இத்தாலியில் உள்ள நகைக் கடையில் 2014இல் நகைகள் வாங்கப்பட்டன.

1MDB நிதியில் SRC International நிறுவனம் செய்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

பின்னர் 2015இல் ஹவாயியில் அமைந்துள்ள Chanel சொகுசுப் பொருள் கடையில் 466,000 (153,800 வெள்ளி) ரிங்கிட் செலவிடப்பட்டது.

கடன்பற்று அட்டைகளுக்கான கட்டணங்கள் திரு நஜிபின் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தப்பட்டன.

66 வயது திரு நஜிப், SRC International நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்