Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: சமய போதகராக இயந்திர மனிதன்

இயந்திரத்தனமான வாழ்க்கையில், எங்கே நிம்மதி என்று தேடி இறைவன் குடியிருக்கும் ஆலயங்களை நோக்கி ஓடுகிறார்கள் ஆன்மிகவாதிகள். 

வாசிப்புநேரம் -
ஜப்பான்: சமய போதகராக இயந்திர மனிதன்

(படம்: AFP/Charly Triballeau)

இயந்திரத்தனமான வாழ்க்கையில், எங்கே நிம்மதி என்று தேடி இறைவன் குடியிருக்கும் ஆலயங்களை நோக்கி ஓடுகிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அங்கே சமய போதகருக்கு பதிலாக ஓர் இயந்திர மனிதன் உட்கார்ந்து உபதேசித்தால் ?

அதைத்தான், கியோட்டோவில் அமைந்துள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த கோடாய்ஜி பௌத்த ஆலயம் செய்கிறது.

Kannon என்னும் இயந்திர மனிதன் அங்கே சமய சன்மார்க்க போதனைகளை வழங்கிவருகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் நாளடைவில் அது ஞானமடைந்துவிடுமென ஊகிக்கிறார்கள் மனித போதகர்கள்.

"Kannon இயந்திர மனிதனுக்கு அழிவே இல்லை. புதிய தகவல்களைக் கொண்டு அது தன்னை மேம்படுத்துகொண்டே வருகிறது" என்று தென்ஷோ கொடோ பௌத்த பிக்கு AFP செய்தி நிறுனத்திடம் தெரிவித்தார்.

விஞ்ஞானத்துடன் கூடிய மெய்ஞ்ஞான இயந்திர மனிதன் மக்களைக் கவர்ந்து வருகிறது.

கலிகாலம் என்று மூத்தோர் பலர் அலுத்துக்கொண்டாலும், இயந்திர மனிதர் என்னதான் உபதேசம் செய்கிறார் என்று கேட்க இளையர்கள் பலர் வரத்தான் செய்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்