Images
  • Robot Tail
    (படம்: Youtube/Screengrab)

முதியவர்களுக்கு உதவும் செயற்கை வால்கள்

தோக்கியோ: பரிணாம வளர்ச்சியால் மனித இனத்திடம் ஒரு காலத்தில் இருந்த வால்கள் மறைந்துள்ளன. இப்போது செயற்கை வாலின் உதவியுடன் முதியவர்களை நிமிர்ந்து நிற்க உதவுகிறது ஜப்பானிய ஆய்வுக் குழு ஒன்று.

சிறுத்தை, குரங்குகள் போல வால்களின் உதவியுன் நடக்க, மரம் ஏறும் விலங்குகளின் அசைவுகளை மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறது ஒரு மீட்டர் நீளமுள்ள வால்.

இடுப்பில் அணியப்படுகிறது செயற்கை வால். உடல் ஒரு பக்கமாக அசையும்போது வால் அதற்கு எதிர்த்திசையில் அசைகிறது. மொத்தமாக 8 திசைகளில் செயற்கை வால் அசையும்.

மூப்படையும் மக்கள்தொகையினர் தொடர்ந்து நடமாட்டமாக இருக்க புதிய கருவி உதவுகிறது.

கனமான பொருள்களைத் தூக்கும் ஊழியர்களுக்கும் செயற்கை வால் உதவியாக இருக்கும் என்பது நம்பிக்கை.

Top