Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் தாய்லந்துக் கரையோரத்தில் 65 ரொஹிஞ்சா அகதிகள்

தென் தாய்லந்துக் கரையோரத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ரொஹிஞ்சா இனத்தைச் சேர்ந்த 65 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தென் தாய்லந்துக் கரையோரத்தில் 65 ரொஹிஞ்சா அகதிகள்

(படம்: AFP/Assadawuth Suden)

தென் தாய்லந்துக் கரையோரத்தில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் ரொஹிஞ்சா இனத்தைச் சேர்ந்த 65 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மார் எல்லையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் தென் தாய்லந்தின் தருடுவோ மரைன்(Tarutao Marine) தேசியப் பூங்காவில் அந்தப் படகு நேற்றுக் காலை கண்டெடுக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான படகில் 31 பெண்களும் ஐந்து பிள்ளைகளும் இருந்ததாகத் தாய்லந்துக் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

படகைச் செலுத்தியவரும் அதிலிருந்த ஐந்து மியன்மார் நாட்டினரும் சட்டவிரோதமாகத் தாய்லந்துக்குள் நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தக் குற்றத்துக்கு பத்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அது ஓர் ஆள்கடத்தல் முயற்சியாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுவதாக AFP செய்தி நிறுவனம் முனனதாகக் கூறியிருந்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்