Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக அதிகாரபூர்வ நிலந்திருத்தும் பணி தொடக்கம்

சிங்கப்பூருக்கும், ஜொகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக, அதிகாரபூர்வ நிலந்திருத்தும் பணியை மலேசியா தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும், ஜொகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக, அதிகாரபூர்வ நிலந்திருத்தும் பணியை மலேசியா தொடங்கியுள்ளது.

விரைவு ரயில் திட்டத்தைத் தொடங்க சிங்கப்பூரும், மலேசியாவும் ஜூலையில் இணக்கம் தெரிவித்திருந்தன.

ஜொகூர் சுல்தானின் பிறந்தநாளை ஒட்டி, இணையம்வழியே நிலந்திருத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஜொகூர் மாநில முதலமைச்சரும், மலேசிய போக்குவரத்து அமைச்சரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிலந்திருத்தும் பணியைத் தொடங்கும் வகையில், ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் முதலில் மின் திரையில் கையெழுத்திட்டார்.

பிறகு, புக்கிட் சகாரில் (Bukit Chagar) பணிகள் தொடங்கின.

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் குடிநுழைவு வசதிகளைக் கொண்ட 4 மாடி CIQ வளாகமும் அமைக்கப்படும்.

RTS எனும் விரைவு ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைகிறது.

2026 டிசம்பர் 31ஆம் தேதிக்குள், அது தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்