Images
  • orang
    படம்: AFP/SONNY TUMBELAKA

பாலியில் மயக்கமருந்து போட்டு ஓராங்குத்தானைக் கடத்த முயன்ற ரஷ்யருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாலி விமான நிலையத்தில் ரஷ்யச் சுற்றுலாப்பயணி ஒருவர் ஓராங்குத்தான் குரங்கிற்கு மயக்க மருந்து கொடுத்து, அதனைப் பெட்டியில் வைத்துக் கடத்த முயன்றுள்ளார்.

விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவருக்கு ஓர் ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 700 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆண்ட்ரி ஸெஸ்ட்கோவ் (Andrei Zhestkov) என்னும் அந்த 28 வயது ஆடவர் ஓராங்குத்தானைத் தமது செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாகக் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் பாதுகாப்புச் சோதனையின்போது ஆடவர் பிடிபட்டார்.

அவர் கடத்த முயன்ற ஆண் ஓராங்குத்தான் குரங்கின் வயது 2.

அதுபோக ஆடவரின் பெட்டியில் 7 பல்லிகளும் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஓராங்குத்தான் குரங்கு அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்று.


Top