Images
  • sk (1)
    (கோப்புப் படம்: REUTERS/Kim Hong-Ji)

தென் கொரியா புதிய இயல்புநிலைக்கான முன்னோடித் திட்டத்தை வகுக்கத் தொடங்கியது

தென் கொரியா, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிடுகிறது.

நோய்ப்பரவலோடு வாழ்வதற்கான உத்திகளை வகுக்க, அது பணிக்குழு அமைக்கிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகரித்து வருவதால், புதிய இயல்புநிலைக்கான முன்னோடித் திட்டத்தைத் தென் கொரியா வகுக்கிறது.

தனியார் துறையினரும், பணிக்குழுச் சந்திப்பில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்.

மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகே பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தென் கொரியா கூறியிருந்தது.

இதுவரை சுமார் 60 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசி போட்டுவிட்டனர்.

தொடர்ந்து 3 ஆவது நாளாக, தினசரி கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2,000-க்குக் கீழ் பதிவாகியுள்ளது. 

Top