Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபா மாநிலத்திற்குப் புதிய முதல்வரை நியமிக்கக் கூடுதல் அவகாசம் தேவை: மாநில ஆளுநர்

மலேசியாவின் சபா மாநிலத்திற்குப் புதிய முதல்வரை நியமிக்கக் கூடுதல் அவகாசம் தேவை என்று மாநில ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சபா மாநிலத்திற்குப் புதிய முதல்வரை நியமிக்கக் கூடுதல் அவகாசம் தேவை என்று மாநில ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய முதலமைச்சராகப் பதவியேற்பது யார் என்பதன் தொடர்பில் போட்டி நிலவும் வேளையில் ஆளுநரின் கோரிக்கை வெளிவந்துள்ளது.

பெர்சாத்து (Bersatu)கட்சியின் சபா மாநிலத் தலைவர் ஹஜிஜி நூர் (Hajiji Noor),
அம்னோவின் (UMNO) சபா மாநிலத் தலைவர் புங் மொக்தார் (Bung Moktar) இருவரும் அந்தப் போட்டியில் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இருவருமே நேற்றைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கபுங்கான் ரக்யாட் சபா கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

அந்தக் கூட்டணி 73 சட்டமன்றத் தொகுதிகளில் 39ஐக் கைப்பற்றியது.

அங்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மையை அது பெற்றுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்