Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சபா மாநிலத் தேர்தல்: Perikatan தலைமையிலான கூட்டணி வென்றால், முஹிதீன் அரசாங்கத்தின் ஆதிக்கம், செல்வாக்கு அதிகரிக்கும்- அரசியல் கவனிப்பாளர்

மலேசியாவின் சபா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தலின் வாக்களிப்பு முடிந்துவிட்டது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் சபா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தலின் வாக்களிப்பு முடிந்துவிட்டது.

முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

சபாவும், அண்டை மாநிலமான சரவாக்கும் மலேசிய அரசியல் களத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நாடாளுமன்ற இடங்களில் கால்வாசி இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவை.

அவற்றுக்கு நிர்வாகம், குடிநுழைவு ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரங்கள் உண்டு.

இவற்றின் சட்டமன்ற வெற்றி, தோல்வி மலேசியப் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்...

வெற்றி பெற்றவர்: Warisan Plus கூட்டணியைச் சேர்ந்த ஷாஃபி அப்டால் (Shafie Apdal)

தோல்வி அடைந்தவர்: 15 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த UMNOவின் மூஸா அமன் (Musa Aman)

திரு. ஷாஃபியின் ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியினர் முயற்சி செய்ததை அடுத்து, அவர் சபா மாநிலச் சட்டசபையைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிவகுத்தார்.

இந்தத் தேர்தல் முடிவு மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அம்னோவுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் என்று கூறப்படுகிறது.

அது பற்றித் தெரிந்துகொள்ள 'செய்தி' மலேசியாவின் மக்கள் ஓசையின் பதிப்பாசிரியரான ராஜேந்திரன் முத்தையாவைத் தொடர்புகொண்டது.

இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள்?

"ஷாஃபி அப்டால் தலைமையிலான Warisan கட்சி வெற்றி பெற்றால், மாநிலத்தில் மத்திய அரசாங்கத்தின் தலையீடோ அவர்களின் ஆதிக்கமோ இல்லாமல், தங்களுக்குள்ள தனித்தன்மை வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்புவதாக இருக்கும்.

பிரதமர் முஹிதீன் யாசின் - அன்வார் இப்ராஹிம், இருவருக்கும் இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியம்?

"Perikatan தலைமையிலான கூட்டணி வென்றால், முஹிதீன் அரசாங்கத்தின் ஆதிக்கம், செல்வாக்கு அதிகரிக்கும். மத்திய அரசாங்கத்திலும் அவருடைய நிலை வலுப்பெரும். அந்த வெற்றி அவருடைய தலைமைத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாகக் கருதப்படும்."

கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் தேர்தல்...

"COVID-19 துயரத்திலிருந்து மீண்டு வருகின்ற நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதில் யாருக்கும் மகிழ்ச்சி இருக்காது என்று நான் நம்புகிறேன். இது சரியான நேரமா என்பதைக் கடந்து, அங்குள்ள அரசியல் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது."

திடீர்ப் பொதுத்தேர்தல் நடைபெறுமா?

"வெற்றி - தோல்வியைப் பார்த்துவிட்டுத் தான் திடீர் தேர்தல் நடைபெறுமா என்று கருத்துரைக்க முடியும். இருப்பினும், இந்தக் கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் ஒரு பொதுத்தேர்தலை நடத்துவது சரியாக இருக்குமா என்பது விவாதத்திற்கு உரிய அம்சம்." 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்