Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் சபா மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

மலேசியாவின் சபா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் சபா மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

(படம்: Bernama)

மலேசியாவின் சபா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

தேர்தலில் வாக்களிக்கச் சுமார் 1.1 ஒரு மில்லியன் பேர் தகுதி பெற்றிருந்தனர்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58 விழுக்காட்டினர் வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்தத் தேர்தலின் முடிவுகள், தேசியத் தேர்தல் எப்போது என்பதை நிர்ணயிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் நிலைத்தன்மை, பொருளியல், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்தன.

சட்டமன்றத்தின் 73 இடங்களுக்கு 16 கட்சிகளைச் சேர்ந்த 447 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எல்லாத் தொகுதிகளிலும் பன்முனைப் போட்டி இடம்பெற்றது.

எனினும் வாரிசான் பிளஸ் கூட்டணிக்கும் (Warisan Plus) கபுங்கான் ரக்யாட் சபா (Gabungan Rakyat Sabah) கூட்டணிக்கும் இடையில்தான் முக்கியப் போட்டி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்