Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிபின் முன்னைய மெய்காப்பாளர் சைருலுக்கு அகதித் தகுதி வழங்க ஆஸ்திரேலியா மறுப்பு

மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் முன்னாள் மெய்காப்பாளரான சைருல் அசார் உமருக்கு (Sirul Azhar Umar) அகதித் தகுதி வழங்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.  

வாசிப்புநேரம் -
மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிபின் முன்னைய மெய்காப்பாளர் சைருலுக்கு அகதித் தகுதி வழங்க ஆஸ்திரேலியா மறுப்பு

படம்: PDRM, AFP

மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் முன்னாள்
மெய்காப்பாளரான சைருல் அசார் உமருக்கு (Sirul Azhar Umar) அகதித் தகுதி வழங்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது.

அதன் காரணமாக சைருல் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் சாத்தியம் உருவாகி இருக்கிறது.

மலேசியாவில் பணியாற்றிய மொழிபெயர்ப்பாளரான 28 வயது அல்டன்டுயா ஷாரிபூ (Altantuya Shaariibu) கொலையுண்ட வழக்கில், சைருலுக்கு 2015-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அந்தத் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னர் அவர் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார்.

அங்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சைருல், குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை அடைக்கலம் கோரி தொடுத்த வழக்கில், சைருல் தோல்வியடைந்தார்.

மலேசியாவில், சைருல் புரிந்த குற்றத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்பதை ஆஸ்திரேலியா சுட்டியது.

எனவே, அவரை அகதியாகப் பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு இல்லை என்றுகூறி இந்தமுறையும் கான்பெரா அடைக்கலத் தகுதிக் கோரிக்கையை நிராகரித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்