Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர்

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார்.

வாசிப்புநேரம் -
இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர்

(படம்: Reuters)

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார்.

தமது ஆசியப் பயணத்தின் ஒரு கட்டமாகத் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் அவர், இன்றிரவு இந்தியத் தலைநகர் புது டில்லியைச் சென்றடைவார்.

பாகிஸ்தானில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தியாவும் தற்காப்பு, வேளாண்மை, எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சவுதி அரேபிய முதலீடுகளை ஈர்க்க எண்ணம் கொண்டுள்ளது.

வர்த்தக உறவை வலுப்படுத்துவதோடு, பாகிஸ்தானிலிருந்து உருவாகும் எல்லை தாண்டிய பயங்கரவாதச் சிக்கல்களைச் சமாளிப்பதில் சவுதி அரேபிய இளவரசரின் ஆதரவைப் பெறுவதும் இந்தியாவின் இலக்குகளில் ஒன்று.

இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி இளவரசர் பின்னர் சீனா செல்லவிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்