Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் புற்றுநோய் உறுதி

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் (Sanjay Dutt) புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் (Sanjay Dutt) புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சில வாரங்களாகவே அவருடைய உடல் நலம் குறித்து ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், தமக்குப் புற்றுநோய் இருப்பதாக சஞ்சய் தத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவரது சிகையலங்காரர் ஆலிம் ஹக்கிம் (Aalim Hakim) தம் Instagram கணக்கில் நடிகர் சஞ்சய் தத்தின் காணொளியைப் பதிவேற்றினார்.

"இது அண்மையில் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள வடு. விரைவில் அதை எதிர்கொள்வேன்" என்று கூறும் நடிகர் சஞ்சய் இடது புருவத்தில் இருந்த தழும்பைச் சுட்டிக்காட்டினார்.

குறுகிய காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வெடுப்பதாக அவர் ஆகஸ்ட் மாதம் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.

தம்முடைய KGF: Chapter 2 திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்