Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காற்றுத் தூய்மைக்கேட்டைச் சமாளிக்க சரவாக்கிற்கு அரை மில்லியன் முகக் கவசங்களை அனுப்பியுள்ளது மலேசியா

மலேசிய அரசாங்கம், சரவாக் மாநிலத்திற்கு அரை மில்லியன் முகக் கவசங்களை அனுப்பியுள்ளது.

வாசிப்புநேரம் -


மலேசிய அரசாங்கம், சரவாக் மாநிலத்திற்கு அரை மில்லியன் முகக் கவசங்களை அனுப்பியுள்ளது.

இந்தோனேசியாவில் காட்டுத் தீச் சம்பவங்கள் மோசமடைவதால் சரவாக் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு முகக் கவசங்களை விநியோகிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.

இன்று சரவாக்கில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு சுகாதாரமற்ற நிலையை எட்டியது.

ஒரு மாவட்டத்தில் குறியீடு 201ஆகப் பதிவானது. அது மிகவும் சுகாதாரமற்ற நிலையாகக் கருதப்படுகிறது.

மலேசியாவின் மற்ற 5 மாநிலங்களிலும் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தோனேசியப் பண்ணையாளர்கள் விளைநிலங்களுக்காகக் காட்டுப் பகுதிகளுக்குத் தீ மூட்டுவது வழக்கம்.

அண்மை வாரங்களில் அங்கு ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமத்ராவில் ஆறு பகுதிகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்