Images
  • kuching
    (கோப்புப் படம்: Bernama)

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி தேர்தல்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி வேட்மனு தாக்கல் செய்யலாம்.

கிருமிப்பரவல் சூழலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வாக்களிப்பு நீட்டிக்கப்படலாம் என்ற ஊகம் எழுந்தது. ஆனால், ஒரே நாளில் வாக்களிப்பு இடம்பெறும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சரவாக் மாநிலத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமாய் அமைந்துள்ளது.  

Top